ஆடி களரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்


ஆடி களரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
x
சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் கொக்கன் கருப்பர் கோவில் ஆடி களரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் ஐந்து நிலை சேகரம் பெரிய பாலம் தேவர் சோலையில் கொக்கன் கருப்பர் சுவாமி ஆடி களரி விழா உற்சவத்தை முன்னிட்டு, எட்டுக்கரை இளைஞர்கள் நடத்தும் 26-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் தமிழக தடயவியல் துறை இயக்குனரும், அனைத்து மறவர் நல கூட்டமைப்பு உயர்மட்ட குழு ஆலோசகருமான விஜயகுமார் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி முன்னிலை வகித்தார். அ.காளாப்பூர் அம்பலக்காரர் பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பெரிய மாடு, சின்ன மாடு என 2 பந்தயங்கள் நடைபெற்றன. பெரிய மாடு பந்தயத்திற்கு 12 வண்டிகள் போட்டிக்கு தயாரானது. அ.காளாப்பூரில் இருந்து மருதிபட்டி வரை 8 மைல் பயண தூரம் நிர்ணயிக்கப்பட்டது. கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் தலைமை முன்னிலை ஏற்பாட்டாளர்கள் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

இதையொட்டி இலக்கை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் முதலாவதாக பறவை அம்மா பொண்ணு நினைவாக கார்த்திகேயன் வண்டியும், இரண்டாவதாக சிங்கம்புணரி பூ கொல்லை காஞ்சனா தேவி ரித்தீஸ்வரன் வண்டியும், 3-வதாக பட்டிவீரன்பட்டி முரளிதரன் வண்டியும், நான்காவதாக மட்டங்கிபட்டி காவியா, புதுப்பட்டி அம்பாள் வண்டியும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சின்ன மாடு பந்தயத்தில் 6 மைல் பயண தூரம் நிர்ணயிக்கப்பட்டு 12 வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் முதலாவதாக கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன் வண்டியும், 2-வதாக மேலமடை சீமான் பாண்டியராஜன் பவித்ரா வண்டியும், 3-வதாக சிங்கம்புணரி செந்தில்குமார் வண்டியும், 4-வது பாதரக்குடி வளர்மதி வண்டியும் வெற்றி பெற்றன.

பரிசுகள்

வெற்றி பெற்ற அனைத்து வண்டிகளுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் ஆறுதல் பரிசாக மாம்பட்டி பாரிவள்ளல் தேவர் வண்டிக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிங்கம்புணரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பல முத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில், அவைத்தலைவர் சிவக்குமார், தொழிலதிபர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மருதிப்பட்டி வெண்ணிலா வெங்கடேசன், கண்ணமங்கலபட்டி செம்மலர் சந்திரன், அ.காளாப்பூர் சுந்தம்மாள் முருகன், சிவபுரிபட்டி தமிழரசி திரவியம் மற்றும் பஞ்சாயத்தார்கள், எட்டுக்கரை இளைஞர்கள், மதிசூடியன், தாயுமானவன், சுவேந்திரன், குகன்ஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரவு 10 மணி அளவில் கதம்ப காமிக் நிகழ்ச்சி நடைபெற்றது.



Next Story