கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x

சிவகங்கையில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கையில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அண்ணாமலைநகர் கீழ்பாத்தியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் அண்ணாமலைநகர்-இளையான்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 69 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக போட்டி நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பூவந்தி அவினாசி நண்பர்கள் மற்றும் தஞ்சாவூர் திருமுருகன் வண்டியும், 2-வது பரிசை எறும்புகுடி செல்வராஜ் மற்றும் பாலார்பட்டி ராஜபாண்டி வண்டியும், 3-வது பரிசை கோம்பை ராமையா வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற நடுமாடு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை சொக்கம்பட்டி செந்தில் மற்றும் நாராயணதேவன்பட்டி சுரேஷ் வண்டியும், 2-வது பரிசை தூத்துக்குடி சமுத்திரக்கனி வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி இளையராஜா மற்றும் வெளிமுத்தி வாகினி வண்டியும் பெற்றது.

சின்னமாடு, பூஞ்சிட்டு

தொடர்ந்து நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை கோட்டணத்தம்பட்டி ரவி வண்டியும், 2-வது பரிசை உடப்பன்பட்டி கணேஷ் வண்டியும், 3-வது பரிசை நாட்டரசன்கோட்டை ஆண்டி மற்றும் ஆட்டுக்குளம் பாபு வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை எறும்புகுடி அஜல்ராஜா வண்டியும், 2-வது பரிசை வானக்கருப்பு செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை கண்டனிப்பட்டி ராஜகண்ணப்பன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story