கல்லல், மதகுபட்டி பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்


கல்லல், மதகுபட்டி பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லல், மதகுபட்டி பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி,

கல்லல் மற்றும் மதகுபட்டி பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றியம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் உள்ள செங்கோலுடைய அய்யனார்கோவில் சிவராத்திரி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பி.நெற்புகப்பட்டி-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் 45 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை வெற்றியூர் சிங்கத்துரை வண்டியும், 2-வது பரிசை மதகுபட்டி பிரத்திஸ்கா வண்டியும், 3-வது பரிசை திருவாதவூர் தன்வந்த்பிரசாத் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 30 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை பூலாங்கால் தொட்டிச்சியம்மன் வண்டியும், 2-வது பரிசை பி.நெற்புகப்பட்டி சாய்ஸ்ரீ, மதினாஸ்ரீ வண்டியும், 3-வது பரிசை வள்ளியூர் ஆனந்த் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேலூர் வண்டியும், 2-வது பரிசை பி.நெற்புகப்பட்டி ரிதன்யாசதீஷ்குமார் வண்டியும், 3-வது பரிசை துவரங்குளம் கரும்பு செல்வம் வண்டியும் பெற்றது.

மதகுபட்டி

இதேபோல் சிவகங்கையை அடுத்த மதகுபட்டி அருகே ராமலிங்கபுரத்தில் அழகிய மெய்ய அய்யனார் கோவில் பால்குடம் மற்றும் காவடி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ராமலிங்கபுரம்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 33 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மாங்குளம் தெய்வேந்திரன் வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும், 3-வது பரிசை வீழநேரி ஒன்றிய கவுன்சிலர் சரவணன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 23 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை இளங்கிப்பட்டி அர்ச்சுணன் வண்டியும், 2-வது பரிசை வீழநேரி சரவணன் வண்டியும், 3-வது பரிசை என்.டி.பட்டி பழனிச்சாமி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story