மாட்டு வண்டி பந்தயம்
ஓட்டப்பிடாரத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் ஸ்ரீஉலகாண்டஈஸ்வரி அம்பாள் கோவில் கொடை விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு 40-வது ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பந்தயத்துக்கு முன்னாள் யூனியன் தலைவர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளர் கொம்புமகாராஜா, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாட்டு வண்டி பந்தயம் ஓட்டப்பிடாரம்-நெல்லை சாலையில் நடந்தது. பெரிய மட்டு வண்டி பந்தயத்துக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்துக்கு 12 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் நாலந்துலா மாட்டு வண்டி முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை அழகுரெட்டியூரணி மாட்டு வண்டியும், 3-வது இடத்தை புதூர் பாண்டியாபுரம் மாட்டு வண்டியும் பிடித்தன. சின்ன மாட்டு வண்டியில் 20 வண்டிகள் கலந்து கொண்டனர். போட்டியை ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நாலந்துலா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து. 2-வது இடத்தை வள்ளியூர் மாட்டு வண்டியும், 3-வது இடத்தை மேட்டூர் மாட்டு வண்டியும் பிடித்தன. வெற்றிபெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு கடம்பூர் தொழிலதிபர் குமார் ராஜா, ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி ஆகியோர் பரிசு வழங்கினர். ேபாட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று கண்டு களித்தனர்.