மாட்டு வண்டி பந்தயம்
கடலாடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சாயல்குடி
கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, கமுதி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவன், மனோகரன், சண்முகநாதன் முன்னிலை வகித்தனர்.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சித்திரங்குடி ராமமூர்த்தி ஆகியோரது வண்டியும் பெற்றது. 2-வது பரிசை வள்ளியூர் முத்தையா ஆனந்த் வண்டியும், 3-வது பரிசை மேலச்செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி வண்டியும், 4-வது பரிசை ஏனாதி பூங்குளத்தான் வண்டியும் பெற்றது.
சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சித்திரங்குடி ராமமூர்த்தி வண்டியும், 2-வது பரிசை பூலாங்கால் சிக்கந்தர் பாட்ஷா வண்டியும், 3-வது பரிசை சிங்கிலி பட்டி முகுந்தன் வண்டியம், 4-வது பரிசை பூலாங்கால் அனுசியா வண்டியும் பெற்றது. இதில், ஊராட்சி தலைவர்கள் கண்டிலான் மணிமேகலை முத்துராமலிங்கம், பெரியகுளம் முத்துமாரி, ஏ.புனவாசல் ராஜேந்திரன், பொதிகுளம்லட்சுமி திருவாப்பு, பெரியகுளம் நீர்ப்பாசன சங்க தலைவர் ரவீந்திர நாதன், கடலாடி நகர் செயலாளர் ராமசாமி, சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கடலாடி ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் பத்மநாதன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியேந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி முரளிதரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.