மாட்டுவண்டி ஊர்வலம்
மாட்டுவண்டி ஊர்வலம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விதைகளே பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு நெல் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலன் வரவேற்றார். இயற்கை விவசாயம் மற்றும் சூழலியல் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் பாண்டித்துரை பேசினார். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர். அழிந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளை சென்றடையும் நோக்கில் பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் வழங்கப்பட்டது. விவசாயிகளும் இந்த ஆண்டு இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்று கொண்டனர். தொடர்ந்து வேளாண் எந்திரங்கள் மற்றும் மரபு சார்ந்த வேளாண் கண்காட்சி நடைபெற்றது. முடிவில் பொருளாளர் ஜான்பால் நன்றி கூறினார். முன்னதாக கோட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய மாட்டு வண்டி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஏ.கே.எஸ்.விஜயன் மாட்டு வண்டியை ஓட்டி வந்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.