காரைக்குடி அருகே சிவராத்திரியையொட்டி மாட்டுவண்டி பந்தயம்
காரைக்குடி அருகே சிவராத்திரியையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே சிவராத்திரியையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டுவண்டி பந்தயம்
காரைக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தில் மகாசிவராத்திரி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 32 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. இதில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை விராமதி தையல்நாயகி கருப்பையா வண்டியும், 2-வது பரிசை கோட்டணத்தாம்பட்டி ரவி வண்டியும், 3-வது பரிசை சித்தனஞ்சாம்பட்டி பாலசுப்பிரமணியன் வண்டியும் பெற்றன.
சின்ன மாட்டுவண்டி பந்தயம்
பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை நெற்புகப்பட்டி பாலு மற்றும் பெருங்குடி வேண்டிவந்தம்மன் வண்டியும், 2-வது பரிசை தளக்காவயல் சசிக்குமார் வண்டியும், 3-வது பரிசை துலையானூர் பொறியாளர் பாஸ்கரன்மகேஸ்வரி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பிரிவில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி மற்றும் கப்பலூர் முத்து வண்டியும், 2-வது பரிசை கப்பலூர் முத்து வண்டியும், 3-வது பரிசை ஆலத்துப்பட்டி கூத்தாச்சியம்மன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.