விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம்
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகேயுள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், முனியசாமி, காளியம்மன் கோவில் ஆனிமாத கொடை விழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு, சின்னமாடு, நடுமாடு என் 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இருபுறமும் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கும் பரிசு தொகை மற்றும் குத்துவிளக்குகள் பரிசாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story