எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்
எசூளகிரி அருகே எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
சூளகிரி
சூளகிரி அருகே எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
எருது விடும் விழா
சூளகிரி அருகே பேடப்பள்ளியில் எருது விடுவிழா நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக காளைகள் ஓடும் பகுதியில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டாரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டு இருந்தன.
விழாவில், இம்மிடிநாயக்கனப்பள்ளி, பேடப்பள்ளி, சின்னார், ஒட்டையனூர், சின்னகானப்பள்ளி, பீர்பள்ளி, முருக்கனப்பள்ளி, சாமல்பள்ளம், மேலுமலை, காளிங்கவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கண்டு ரசித்தனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்து ஓடின
இந்த காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இளைஞர்களும், மாடுபிடி வீரர்களும் காளைகளை விரட்டிச் சென்று அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டு இருந்த அலங்கார தட்டிகள் பரிசு பொருட்களை பறிக்க முயன்றனர். அப்போது கூட்டத்தினர் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். விழாவையொட்டி குளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.