குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
கூத்தாநல்லூர் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள, அன்னுக்குடியில் கீழத்தெரு மற்றும் மேலத்தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை வழியாக குலமாணிக்கம், பள்ளிவர்த்தி, வேற்குடி, ஓவர்ச்சேரி, விக்கிரபாண்டியம் உள்ளிட்ட ஊர்களை கடந்து கூத்தாநல்லூர், கோட்டூர், வடபாதிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சாலை சீரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்றது. அப்போது, முதற்கட்ட பணியாக பெரிய கப்பி கற்கள் கொட்டப்பட்டு அதன் மீது சிவப்பு மணல் கொட்டி மூடப்பட்டது. அதன்பிறகு, தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், சிவப்பு மணல் கொட்டி மூடப்பட்ட கற்கள் தற்போது சாலைகளில் சிதறியும், குண்டும், குழியுமாகவும் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
மேலும், மழை பெய்யும் போது சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை தார்சாலையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.