பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே மேங்கோ ரேஞ்ச் ஏலமன்னா வழியாக கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு பகுதிகளுக்கு இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் அநத சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. ஆதிவாசிமக்களும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படுவதற்குள் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Next Story