2 மாதங்களில் குண்டும் குழியுமான சாலை
2 மாதங்களில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 12,000-க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருவதால் பல மாநிலங்களில் இருந்தும், பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். ஏலகிரி மலை சுமார் 14 கொண்டு ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் இரண்டு மாதங்களுக்கு முன் மழையின் காரணமாக பாலம் சேதம் அடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை சீரமைத்தனர். 2 மாதங்களில் இந்தப்பகுதி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story