வீட்டுக்குள் புகுந்து நகை திருட்டு


வீட்டுக்குள் புகுந்து நகை திருட்டு
x

தேசூர் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூரை அடுத்த ஜெங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 55). இவருடைய தந்தை ஏழுமலை இறந்துவிட்டார். இதுகுறித்து 5 நாட்கள் உறவினர்கள் துக்கம் விசாரிக்க வந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு வாலிபர் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

இன்று காலை எழுந்து பார்க்கும் போது பீரோ திறந்து கிடந்தது. அப்போதுதான் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தேசூர் போலீசில் முனியாண்டி புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய வாலிபரை தேடி வருகிறார்.


Next Story