என்ஜினீயர் வீட்டில் திருட்டு


என்ஜினீயர் வீட்டில் திருட்டு
x

பேட்டையில் என்ஜினீயர் வீட்டில் திருட்டு போனது

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை திருமங்கை நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுடலைகுரு (வயது 35). இவர் என்ஜினீயராக கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யசோதா (32) நேற்று பாப்பாக்குடியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். இதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு மற்றும் கியாஸ் அடுப்பை திருடி சென்று உள்ளனர். இது குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.


Next Story