ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு வீட்டில் திருட்டு


ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு வீட்டில் திருட்டு
x

நெல்லை கோடீஸ்வரன் நகரில் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு வீட்டில் திருட்டு நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுனை அடுத்த கோடீஸ்வரன் நகர் 2-வது மெயின் ரோடு 24-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவன் (வயது 66). ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டான இவர், தனது மனைவியுடன் கடந்த 1-ந் தேதி சென்னையில் வசித்து வரும் மகளை ஆடிக்கு அழைப்பதற்காக சென்றுள்ளார். மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து நெல்லை திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோவில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. சமையலறையின் ஜன்னல் கதவு இரும்பு கம்பிகள் உடைக்கப்பட்டு பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து பேட்டை போலீசுக்கு, சிவன் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர்கள் அன்னலட்சுமி, ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ஒரு கிராம் தங்க காசுகள் 2, மூன்று அடி உயரமுள்ள பித்தளை குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, லேப்-டாப் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story