பூட்டிய வீட்டில் நகை திருட்டு


பூட்டிய வீட்டில் நகை திருட்டு
x

அம்பையில் பூட்டிய வீட்டில் நகை திருடப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை காந்திநகரில் வசிப்பவர் முருகேசன் மகன் கணேசன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 3-ந் தேதி சென்னை சென்றவர் நேற்று அம்பைக்கு வந்துள்ளார். வீட்டை பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்ததும் அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த 14-ந் தேதி இதன் அருகில் உள்ள பகுதியில் மூன்று வீடுகளில் திருட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே நபர்தான் இந்த வீட்டிலும் திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்கள் மூலம் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

* ராதாபுரம் அருகே பரமேஸ்வரபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி, சி.சி.டிவி கேமரா, மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story