கோவிலில் துணிகர திருட்டு


கோவிலில் துணிகர திருட்டு
x

கோவிலில் துணிகர திருட்டு

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே பூட்டேற்றியில் அம்பிகா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் திருவிழா நடந்தது. மேலும் 8-ம் கொடை முடிந்த நிலையில் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கோவிலில் புகுந்த மர்மஆசாமிகள் உண்டியலை உடைத்துள்ளனர். அதில் காணிக்கை பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் 2 விளக்குகள் மற்றும் கோவில் மணியை திருடி சென்று விட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story