கழுகுமலையில்வீட்டின் கம்பி கேட் திருட்டு
கழுகுமலையில்வீட்டின் கம்பி கேட் திருடப்பட்டது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை திருமாளிகை தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் பேச்சிமுத்து(வயது 38). தொழிலாளி. இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் உரிமையாளரான ஆபிரகாம் சென்னையில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே உரிமையாளருக்கு சொந்தமான காலி இடத்தில் இரும்பு கம்பி கேட் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் பூட்டை உடைத்து கம்பி கேட்டை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story