தொழிலாளி வீடு மீது பட்டாசு வீச்சு:2 வாலிபர்கள் சிக்கினர்
புதுகோட்டை அருகே தொழிலாளி வீடு மீது பட்டாசு வீசிய: 2 வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
புதுக்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 55). தொழிலாளி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டில் திம்மராஜபுரம் மேலத் தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி (22), பொன் முத்துராமலிங்கம் (20) ஆகிய 2 பேரும் குடிபோதையில் அணுகுண்டு பட்டாசை பற்ற வைத்து வீட்டின் மீது வீசினார்களாம். இதில் பட்டாசு வீட்டின் ஜன்னலில் பட்டு வெடித்து சிதறியது.
இது குறித்து சண்முகவேல் தட்டப்பாறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷகிலா சைனி வழக்கு பதிவு செய்து மந்திரமூர்த்தி, பொன்முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story