பஸ்-கார் மோதல்; 3 பேர் படுகாயம்


பஸ்-கார் மோதல்; 3 பேர் படுகாயம்
x

கிருஷ்ணகிரி அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றது. இதேபோல் திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி அருகே சூலமலை தனியார் கல்லூரி அருகே சென்ற போது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த ஜக்கசந்திரத்தைச் சேர்ந்த சரவணன் (வயது42), வெங்கடம்மா (60), சுப்பிரமணி (70) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் அங்கு சென்று விபத்துக்குள்ளான பஸ் மற்றும் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.


Next Story