பஸ் மோதி வாலிபர் பலி


பஸ் மோதி வாலிபர் பலி
x

சின்னசேலம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியானார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள தென்சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு மகன் அசோக் (வயது 23). இவர் நேற்று மேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தை சேர்ந்த பாபு மகன்கள் ஆர்த்திபன்(21), அரியேந்திரன்(23) ஆகியோரும் வந்தனர்.

பெரியசிறுவத்தூர் சாலையில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசோக் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த ஆர்த்திபன், அரியேந்திரன் ஆகியோர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story