கண்டக்டரை தாக்கியவர் கைது
டிக்கெட் எடுக்க கூறியதால் ஆத்திரமடைந்து கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர்
மன்னார்குடி, ஜூன்.2-
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்வதற்கு அரசு பஸ் நேற்றுமுன்தினம் மன்னார்குடி பஸ் நிலையத்தில் தயாராக இருந்தது. பஸ்சில் கண்டக்டராக இருந்த ராயநல்லூரை சேர்ந்த முருகானந்தம் (வயது 48) பயணிகளிடம் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கோட்டூர் அருகே உள்ள கோமளப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (46) என்பவரிடம் டிக்கெட் எடுக்க கண்டக்டர் முருகானந்தம் கூறினார். அப்போது டிக்கெட் எடுக்க முடியாது என கண்டக்டரிடம் கார்த்திகேயன் தகராறு செய்து கண்டக்டர் முருகானந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் சேர்ந்து கார்த்திகேயனை மடக்கிப்பிடித்து மன்னார்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story