அரூரில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ்கள்


அரூரில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ்கள்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கடந்த 14-ந் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதேபோல் அரூருக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் படையெடுத்தனர். இந்தநிலையில் பண்டிகை முடிந்து பொதுமக்கள் அரூரில் இருந்து தாங்கள் வேலை செய்யும் பகுதிகளுக்கு நேற்று முன்தினம் திரும்பினர். அவர்களின் வசதிக்காக அரூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு பஸ்களில் ஏறினர். இதேபோல் நேற்று காலையும் அரூர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பஸ்களில் கூட்டம் அலைமோதியது.


Next Story