பஸ் டிரைவர் தற்கொலை
பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் தான்தோன்றிமலையை சேர்ந்தவர் பக்தவச்சலம் (60). இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பக்தவச்சலம் மாயனூரில் அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது வயிற்று வலி அதிகமாகவே வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story