தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது


தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது
x

தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையில் இருந்து சேரன்மாதேவிக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று மதியம் சென்றுகொண்டிருந்தது. பேட்டை சாஸ்திரி நகர் அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிளின் மீது உரசிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பட்டன்கல்லூரைச் சேர்ந்த வள்ளிக்கண்ணன் (வயது 26), சுத்தமல்லி விலக்கு அருகே பஸ்சை வழிமறித்தார். பின்னர் அருகில் கிடந்த கல்லைக்கொண்டு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பஸ் டிரைவர் பிராஞ்சேரி காமராஜர் காலனியை சேர்ந்த மூக்காண்டி (54) என்பவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வள்ளிக்கண்ணனை கைது செய்தனர். இவர் மற்றொரு தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story