இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
திருப்பூர்


திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 30). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். கடந்த 19-6-2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் காங்கயம் ரோடு நல்லிக்கவுண்டன்நகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மோதி இறந்தார்.

அவரது மனைவி, மகள் மற்றும் தந்தை ஆகியோர் விபத்து இழப்பீடு கேட்டு திருப்பூர் மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அரசு போக்குவரத்து கழகம், ரூ.16 லட்சத்து 29 ஆயிரத்து 400-ஐ, அலாவுதீனின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக கொடுக்க கடந்த 13-11-2017-ம் ஆண்டு கோர்ட்டில் தீர்ப்பானது. அதன்பிறகும் அவர்கள் இழப்பீடு கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கோர்ட்டில் அலாவுதீனின் குடும்பத்தினர் ஜப்தி மனு செய்தனர். இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருப்பூர்-பட்டுக்கோட்டை செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல்கள் முருகேசன், சத்தியா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.


Next Story