மொபட் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி


மொபட் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி
x

மொபட் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் அருகே மொபெட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். காயம் அடைந்த மற்றொருவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மொபட் மீது அரசு பஸ் மோதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூரில் தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சிலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ட்ரூபட் நர்சாரி (வயது 41), ரபிப் நர்சாரி (36), பிரஞ்சாய் நர்சாரி (29) ஆகிய 3 பேரும் ஒரு மொபெட்டில் தாராபுரம் கடைவீதிக்கு வந்தனர். பின்னர் கடை வீதியில் பணிகளை முடித்துக் கொண்டு தாராபுரம்-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது ெமாபட் அமராவதி புதுஆத்துப்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மதுைரயில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மொபட் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் சென்று கொண்டிருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அப்போது பஸ்சில் பயணித்த பயணிகள் கீழே இறங்கி அவர்களை மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

2 பேர் பலி

தகவலின் பேரில் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது விபத்தில் ரத்த வெள்ளத்தில் அடிபட்டு கிடந்த ட்ரூநட் நர்சாரி சம்பவ இடத்திலேயே பலியானார். ரவிப் நர்சாரி மற்றும் பிரஞ்சாய் நர்சாரி ஆகிய இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சை்ககாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிப் நர்சாரி உயிரிழந்தார். பிரஞ்சாய் நர்சாரி பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

---


Next Story