தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்


தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
x

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்;

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் வட்டார அளவிலான தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், உமாசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, தொழில் மையத் திட்டம் மேலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டம், பாரத பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கு திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் குறித்து பேசினர்.கூட்டத்தில் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 51 ஊராட்சிகளில் இருந்து இளைஞர்கள், தொழில் முனைவோர், சுயதொழில் செய்பவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story