விருதுநகரில் தொழில் கடன் விழா
தொழில் கடன் விழா நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மற்றும் விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சங்க அரங்கில் தொழில் கடன் விழா நடைபெற்றது. தொழில் முதலீட்டு கழக தலைமை பொது மேலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி தொழில் கடன் திட்டங்களை பற்றி விளக்கி பேசினார். விருதுநகர் மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் இதயம் முத்து சிறப்புரையாற்றினார். சிறு, குறு தொழிற்சங்க செயலாளர் குருசாமி, ரோட்டரி சங்க துணை ஆளுனர் வடிவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர். தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் முருகேசன் வரவேற்றார். விருதுநகர் ரோட்டரி சங்க செயலாளர் ராஜீவன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் செய்திருந்தார்.
Related Tags :
Next Story