வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை கடலில் கரைப்பு
தூத்துக்குடியில் வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை வெள்ளிக்கிழமை கடலில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வழக்கம் போல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது.
சிலை கரைப்பு
நேற்று விநாயகர் சிலை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் விநாயகர் சிலை லாரியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏ.டி.உத்திரபாண்டி தலைமை தாங்கினார். தூத்துக்குடி பழைய மாநகர இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் ஞானமணி ஆசீர்வாதம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாயகர் சிலை ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக திரேஸ்புரம் வடபாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கடற்கரையை வந்தடைந்தது. அங்கு படகு மூலம் விநாயகர் சிலை கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.