சிவகாசியில் தொழில் கடன் மேளா
சிவகாசியில் தொழில் கடன் மேளா இன்று தொடங்குகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ெதாழில் முதலீட்டு கழக அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி வருகிற 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நிதிக்கழகமாகும். இந்த கடன் விழாவில் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தமிழக அரசு 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ. 75 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியத்தை பெற்று கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.