தொழில் தொடங்குவதற்கான மானியம், வயது வரம்பு உயர்வு


தொழில் தொடங்குவதற்கான மானியம், வயது வரம்பு உயர்வு
x

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க திட்ட மதிப்பீடு, மானிய தொகை மற்றும் வயது வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க திட்ட மதிப்பீடு, மானிய தொகை மற்றும் வயது வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இத்திட்டத்தின் கீழ் வியாபார தொழிலுக்கு திட்ட முதலீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி உள்ளது.

மேலும் தொழில் தொடங்க மானியத் தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 45 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 55 வயதாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வித்தகுதி கிடையாது..

மாவட்ட தொழில் மையம்

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதிவாய்ந்த நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து இரு நகல்களுடன் மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதி சான்று, விலைப்புள்ளி மற்றும் போட்டோ (இரண்டு வீதம்) ஆகிய இணைப்புகளுடன் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டம் தொடர்பாக விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அவரது செல்போன் எண் 8925534011, 8925534010 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story