அந்தியூர் அருகே பரபரப்பு சமுதாயக்கூடம் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு அதிகாரிகள்- போலீசார் பேச்சுவார்த்தை


அந்தியூர் அருகே பரபரப்பு  சமுதாயக்கூடம் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு   அதிகாரிகள்- போலீசார் பேச்சுவார்த்தை
x

சமுதாயக்கூடம் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு

ஈரோடு

அந்தியூர் அருகே சமுதாயக்கூடம் கட்ட ஒரு தரப்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சமுதாயக்கூடம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி ஜி.எஸ்.காலனி. இங்கு அந்தியூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமுதாயக்கூடம் கட்ட ரூ.38 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

எதிர்ப்பு

இந்த நிலையில் இங்கு கட்டிடம் கட்டுவதற்காக பணியாளர்கள் நேற்று வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் இங்கு சமுதாயக்கூடம் கட்டினால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் இங்கு கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கட்டிட பணிகள் நடைபெற்றன.


Next Story