தேவர்சோலை அருகே பரபரப்பு: ஊருக்குள் புகுந்து குடிநீர் கிணற்றை சேதப்படுத்திய காட்டு யானை


தேவர்சோலை அருகே பரபரப்பு:  ஊருக்குள் புகுந்து குடிநீர் கிணற்றை சேதப்படுத்திய காட்டு யானை
x

தேவர்சோலை அருகே ஊருக்குள் புகுந்து குடிநீர் கிணற்றை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை அருகே ஊருக்குள் புகுந்து குடிநீர் கிணற்றை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானை

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட செட்டியங்காடி கிராமத்துக்குள் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் இரவில் ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

தொடர்ந்து ஒரு காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவரது குடிநீர் கிணற்றின் தடுப்பு சுவரை உடைத்து தள்ளியது. இதில் கிணறு பலத்த சேதம் அடைந்துள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பின்னர் விடியற்காலையில் காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது. இது குறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறும் போது, காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் மட்டுமின்றி வீடுகளும் தாக்குதலுக்காகி வருகிறது. இரவு பகல் என எந்த நேரமும் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காட்டு யானைகள் ஊருக்குள் வரும் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story