கோபி அருகே பரபரப்பு:கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்


கோபி அருகே பரபரப்பு:கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
x

கோபி அருகே கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள், அருகே உள்ள தோட்டத்தில் வைத்து உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள், அருகே உள்ள தோட்டத்தில் வைத்து உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டனர்.

அண்ணமார் கோவில்

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திரா நகரில் அண்ணமார் கோவில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்தநிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி நல்லசாமி என்பவர் கோவிலுக்கு சென்றார். அப்போது ேகாவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லசாமி உள்ளே ஓடிச்சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியல்களும் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

தோட்டத்தில் கிடந்த உண்டியல்கள்

இதுகுறித்து பூசாரி நல்லசாமி கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதேபோல் மோப்பநாயும் கொண்டுவரப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி கோவில் அருகே உள்ள தோட்டப்பகுதியில் போய் நின்றது. இதனால் போலீசார் தோட்டத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 உண்டியல்களும் அங்கு கிடந்தன.

வலைவீச்சு

உண்டியல்களில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் நுழைந்து உண்டியல்களை பெயர்ந்து வெளியே எடுத்து சென்றுள்ளனர். பின்னர் தோட்டத்தில் வைத்து உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். உடைக்கப்பட்ட உண்டியலில் எவ்வளவு காணிக்கை இருந்தது என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story