கவுந்தப்பாடி அருகே பரபரப்புதுண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொடூர கொலைபவானி ஆற்றில் உடல் வீச்சு


கவுந்தப்பாடி அருகே பரபரப்புதுண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொடூர கொலைபவானி ஆற்றில் உடல் வீச்சு
x

பவானி ஆற்றில் உடல் வீச்சு

ஈரோடு

கவுந்தப்பாடி அருேக வாலிபரை துண்டு, துண்டாக வெட்டி வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பவானி ஆற்றில் வீசியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

முண்டமாக மிதந்த உடல்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருேக உள்ள செரையாம்பாளையத்தில் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் காலை ஒரு ஆண் பிணத்தின் முண்டம் மட்டும் மிதந்தது. கைகள், கால்கள், தலையை காணவில்லை.

இதுகுறித்து பெருந்தலையூர் கிராம நிர்வாக அதிகாரி பஞ்சநாதன் கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பவானி ஆற்றுக்கு சென்று பிணத்தை மீட்டார்கள். மேலும் பிணத்துக்கு உரிய கைகள், கால்கள், தலை மிதக்கின்றனவா? என்று ஆற்றில் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.

கை, கால்கள் கிடைத்தன

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மீண்டும் போலீசார் பவானி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது செரையாம்பாளையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிபாளையம் என்ற இடத்தில் கைகள், கால்கள், ஒரு தலை மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடல் பாகங்களை மீட்டு ஏற்கனவே செரையாம்பாளையத்தில் கிடைத்த முண்டத்தோடு பொருத்தி பார்த்தார்கள். அது ஒரே உடலுக்கு உரியது என்பதுபோல் இருந்தது. இருந்தாலும் முறையாக உடற்கூறு பரிசோதனை செய்தால்தான் தெரியவரும் என்பதற்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

நோட்டீசு வினியோகம்

கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? யார் அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்தது? கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் யார் என்று தெரியவந்தால்தான் கொலையாளிகளை விரைவில் பிடிக்க முடியும். அதனால் கவுந்தப்பாடி போலீசார் மீட்கப்பட்ட தலையை புகைப்படம் எடுத்து, இவரை அடையாளம் தெரிந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம் என்று பொதுமக்களிடம் நோட்டீசு வினியோகித்தனர். மேலும் அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் கொலை செய்யப்பட்டவரின் படத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

கைகள், கால்கள், தலை என உடலை துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி பவானி ஆற்றில் வீசிச்சென்ற சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story