ஓமலூர் அருகே பரபரப்புபள்ளி மாணவர்களை ஏற்ற மறுத்ததால் தனியார் பஸ் சிறை பிடிப்பு


ஓமலூர் அருகே பரபரப்புபள்ளி மாணவர்களை ஏற்ற மறுத்ததால் தனியார் பஸ் சிறை பிடிப்பு
x

ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்ற மறுத்ததால் தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்

ஓமலூர்,

பள்ளி மாணவர்கள்

ஓமலூர் அடுத்த பூசாரிப்பட்டி ஊராட்சி தாசசமுத்திரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் 7 பேர் சேலத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போட்டி முடிந்து நேற்று மதியம் சேலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பஸ்சில் ஏறி உள்ளனர்.

அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் தாச சமுத்திரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காது எனவும், இது இடை நில்லா பேருந்து எனவும் கூறி அவர்களை இறக்கி விட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

தனியார் பஸ் சிறைபிடிப்பு

இதையடுத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தாச சமுத்திரம் பஸ் நிறுத்தத்தில் அந்த தனியார் பஸ்சை நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அடுத்து வந்த பஸ்சில் ஏறி மாணவர்களும் அங்கு வந்தனர்.

போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் போலீசார் முன்னிலையில், இனி வருங்காலங்களில் பஸ்சை தாச சமுத்திரத்தில் நிறுத்தி செல்வதாக எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதன்பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் தாச சமுத்திரத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Related Tags :
Next Story