கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர்; அடுத்த மாதம் வரை வழங்கப்படுகிறது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர் அடுத்த மாதம் வரை வழங்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர் அடுத்த மாதம் வரை வழங்கப்பட உள்ளது.
பக்தர்களுக்கு மோர்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தினமும் மோர் வழங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதைதொடர்ந்து குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கோவில் மேலாளர் ஆனந்த் ஏற்பாட்டின் பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பகல் நேரத்தில் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு மோர் தானம் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் வரை மோர் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story