அயோடின் கலந்த உப்பை வாங்க வேண்டும்
நாகை மாவட்டத்தில் அயோடின் கலந்த உப்பை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் அயோடின் கலந்த உப்பை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அயோடின் கலந்த உப்பு
உணவுக்காக உப்பு பாக்கெட் வாங்கும்போது அந்த உப்பு பாக்கெட்டில் அயோடின் கலந்த உப்பு என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதையும், அந்த உப்பு பாக்கெட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, தரக்கட்டுப்பாட்டு எண், அயோடின் கலந்துள்ளதா?, உணவுக்கு உகந்ததா, சிரிக்கும் சூரியன் படம் இடம் பெற்றுள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். ஒருசில உப்பு தயாரிப்பாளர்கள் உணவுக்கு பயன்படுத்த தகுதியில்லாத, அயோடின் கலக்கப்படாத உப்பை இயற்கை உப்பு என்ற பெயரிலும், பதப்படுத்தும் உப்பு என்ற பெயரிலும் ஏமாற்றி வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த உப்பை உணவுக்கு பயன்படுத்த கூடாது.
புகார் தெரிவிக்கலாம்
அதை பதப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த உப்பினால் நமக்கு தேவையான அத்திவாசிய செறிவூட்டப்பட்ட அயோடின் கிடைக்காது. திறந்தவெளியில் வைத்து பாக்கெட் செய்யப்படும் சாதா உப்பு மற்றும் பிற உபயோகத்திற்காக தயாரிக்கப்படும் உப்பில் உணவுப்பாதுகாப்பு தரங்கள் எதுவும் கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும்.
இதுதொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறை புகார் எண் (9444042322) மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் புகார் எண்ணிற்கு (91500 57408) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.