தி மு க ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல்
கள்ளக்குறிச்சியில் தி மு க. ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் அமைச்சர் எ வ வேலு ஆய்வு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் ஆகிய ஒன்றியங்களில் செயலாளர், அவைத்தலைவர், துணை, இணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில், தேர்தல் ஆணையாளர்கள் சுகுமாரன், சேகர், மலர்மன்னன், சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர், துணை, இணை செயலாளர்கள், அவைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட கட்சி நிர்வாகிகள் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து தேர்தல் ஆணையாளர்களிடம் கொடுத்தனர். அப்போது அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலு விருப்ப மனுக்களை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார். முன்னதாக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட கட்சி நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்களுடன் வந்து விருப்ப மனு கொடுத்தனர்.