காற்றின் வேகத்தால் ஆண்டிப்பட்டி பகுதியில் மின் உற்பத்தி அதிகரிப்பு
காற்றின் வேகத்தால் ஆண்டிப்பட்டி பகுதியில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது
தேனி
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, காமாட்சிபுரம், கண்டமனூர், சீப்பாலக்கோட்டை, கோவிந்தநகரம், மரிக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த மே மாத இறுதியில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வீசிக் கொண்டே வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் திடீரென அதிகரித்தது. இதில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது ஒரு காற்றாலையில் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 38 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story