ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது


ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
x

அந்தியூர் அருகே பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

ஈரோடு

அந்தியூர் அருகே பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி மாயம்

அந்தியூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.

தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என புகார் செய்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் பகுதியில் வாலிபர் ஒருவருடன் மாணவி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த மாணவியையும், வாலிபரையும் மீட்டு அந்தியூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் அந்தியூர் அருகே உள்ள சொக்கநாதர் மலையனூரை சேர்ந்த நல்லசாமி (வயது 27) என்பதும், அவர் அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நல்லசாமியை போலீசார் கைது செய்து பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்


Next Story