ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிட வேண்டும்; செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிட வேண்டும்; செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிட வேண்டும்; செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை தாங்கி பேசினார்.

கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ., கட்சி கணிசமான வாக்குகளை, ஈரோடு கிழக்கு தொகுதியில் பெற்றுள்ளது. எனவே, நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிட மாநில தலைமை ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் பாஷா, செயலாளர் முனாப், பொருளாளர் பர்ஹான் அகமது, எஸ்.டி.டி.யு., தொழிற்சங்க மாநில பொருளாளர் ஹசன், நிர்வாகிகள் அப்துல் ரகுமான், சபீர் அகமது, பசீர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story