ஈரோடு இடைத்தேர்தலில் குடுகுடுப்பைக்காரன் வேடமிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு


ஈரோடு இடைத்தேர்தலில் குடுகுடுப்பைக்காரன் வேடமிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
x

ஈரோடு இடைத்தேர்தலில் குடுகுடுப்பைக்காரன் வேடமிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், உலிபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 41). இவர் தி.மு.க. தலைமை பேச்சாளராக உள்ளார். சேலம் கோவிந்தன் என்பதை விட குடுகுடுப்பை கோவிந்தன் என்றால் கட்சியினர் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பெரியார் வீதி, வளையக்கார வீதி, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குடுகுடுப்பைக்காரன் வேடமிட்டு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டார்.

இதுகுறித்து கோவிந்தன் கூறும்போது, கடந்த 20 ஆண்டுகளாக நான் தி.மு.க.வில் உள்ளேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குடுகுடுப்பைக்காரன் வேஷம் போட்டுக்கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டேன். அதன் பிறகு அரவக்குறிச்சி தொகுதி, சூலூர், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் அதன் பிறகு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் குடுகுடுப்பை வேடமிட்டு பிரசாரம் செய்து வருகிறேன்.

இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் குடுகுடுப்பை அடித்துக்கொண்டு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றேன். தொடர்ந்து வருகிற 25-ந்தேதி வரை வாக்கு சேகரிக்க உள்ளேன்' என்றார்.


Next Story