ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்தல் பிரசாரம்


ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்தல் பிரசாரம்
x

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்தல் பிரசாரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் வேட்பாளர் மேனகா நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். காலையில் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது வீடு, வீடாக சென்ற வேட்பாளர் மேனகா பொதுமக்களை சந்தித்து கரும்பு விவசாயி சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வாக்குகளை சேகரித்தார். இதேபோல் மாலையில் பெரியார்நகர் பகுதியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார். இந்த பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story