ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரேநாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்


ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரேநாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று ஒரே நாளில் 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று ஒரே நாளில் 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது.

இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், இவருக்கு மாற்று வேட்பாளராக விசாலாட்சி, அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

36 பேர் தாக்கல்

மேலும் இந்திய சுயராஜ்ய கட்சி சார்பில் ராம்குமார், வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் கிருஷ்ணமூர்த்தி, அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி சார்பில் திருக்கை முனியப்பன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி சார்பில் அருள், சமாஜ்வாதி கட்சி சார்பில் முத்துசாமி, இந்திய கண சங்கம் கட்சி சார்பில் மாதன், சுயேச்சைகளாக தங்கவேல், ராகவன், சம்சுதீன், கீர்த்தனா, மணிவண்ணன், அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் என 16 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நேற்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட கடந்த 4 நாட்களில் மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story