கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அமைச்சர் நாசர் பிரசாரம்
கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அமைச்சர் நாசர் பிரசாரம்
ஈரோடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார். வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமையில் கட்சியினர் வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story