90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு


90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்;         அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
x

90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார் என்று ஈரோட்டில் அமைச்சர் தா,மோ.அன்பரசன் கூறினார்.

ஈரோடு

90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார் என்று ஈரோட்டில் அமைச்சர் தா,மோ.அன்பரசன் கூறினார்.

வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் பலர் பல்வேறு இடங்களில் தினந்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு கோட்டை அகில்மேடு வீதி, முத்துசாமி வீதி, பழனிமலை வீதி, நேரு வீதி ஆகிய பகுதிகளில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வீடு, வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பல்வேறு சாதனைகள்

முன்னதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாங்கள் வாக்கு கேட்டு செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பொதுமக்களிடம் பெரிய எழுச்சியை காண முடிகிறது. முதல் -அமைச்சர் கடந்த 1½ ஆண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்காக ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு 6 மாத காலத்திற்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதி, தி.மு.க. கொள்கை பரப்பு மாநில இணைச்செயலாளர் வி.சி.சந்திரகுமார், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் கருப்பசாமி, புவனேஷ்வரி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story