ஈரோட்டில் தி.மு.க. நிர்வாகிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை
ஈரோட்டில் தி.மு.க. நிர்வாகிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஈரோடு பாரதிதாசன் வீதியில் உள்ள தி.மு.க. தேர்தல் பணிமனையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தி.மு.க.வினர் குழு, குழுவாக பிரிந்து ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது, தி.மு.க. ஆட்சியின் 1½ ஆண்டுகால சாதனையை விளக்கி கூறுவது, பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை எடுத்து கூறுவது தொடர்பாக அவர் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story