ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி; ஈரோட்டில் அப்துல்சமது எம்.எல்.ஏ. பேட்டி


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி; ஈரோட்டில் அப்துல்சமது எம்.எல்.ஏ. பேட்டி
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி; ஈரோட்டில் அப்துல்சமது எம்.எல்.ஏ. பேட்டி

ஈரோடு

மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி.

அ.தி.மு.க.வின் தலைமை பா.ஜ.க.தான் என்று வெளிப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டுமா? அந்த கட்சி 2 அல்லது 3 ஆக பிளவுபட்டு இருக்க வேண்டுமா? ஒற்றுமையாக இருக்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்க கூடியவர்கள் நாங்கள் என்பதை பா.ஜ.க. இந்த பிரச்சினை மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறது.

அ.தி.மு.க. தனித்து இயங்க முடியாத நிலையில் உள்ள கட்சி. தங்களது கட்சியையே கட்டுப்படுத்த முடியாதவர்களால் மக்கள் சேவை செய்ய முடியுமா? என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் இழந்து விட்டார்கள். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. ஒன்று திரண்டு வந்தாலும் சரி, இரட்டை இலை சின்னத்துடன் வந்தாலும் சரி, பா.ஜ.க.வை கூட்டணிக்கு அழைத்து வந்தாலும் சரி வேட்பாளர் டெபாசிட்டை இழப்பது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மீரான், முகமது ரிஸ்வான், சுல்தான் அலாவுதீன், அமீர், முகமது லரீப், சாகுல் அமீது, சையது முஸ்தபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story